
பிப்ரவரி 06, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) இன்று உலகம் முழுவதும் வெளியானது. 2 ஆண்டுகள் கழித்து அஜித் குமாரின் படம் வருகிறது என்றதுமே ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்க்கத் தொடங்கினர். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
விடாமுயற்சி கதை (Vidaamuyarchi Plot):
ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ளது விடாமுயற்சி. அர்ஜுன் (அஜித் குமார்), கயல் (த்ரிஷா) இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். 12 ஆண்டுகள் கழித்து கயலுக்கு இன்னொருவர் மீது காதல் ஏற்பட்டு விட்டதால் அர்ஜுனை பிரிய முடிவு செய்கிறார். கயலை அவள் பெற்றொர் வீட்டில் விட்டுவர போகும் வழியில் யாரோ கடத்திச் செல்கிறார்கள். தனது மனைவியை தேடிச் செல்லும் அர்ஜூன் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார். காணாமல் போன தனது மனைவியை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை (Vidaamuyarchi Review). Kaali Venkat: நடிகர் காளி வெங்கட்டின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!
பிளஸ்:
அஜித் குமார் மட்டுமே இந்த படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். மாஸான இன்ட்ரோ, பஞ்ச் டயலாக் , மிகைப்படுத்த ஆக்ஷன் என எல்லாவற்றையும் தவிர்த்துள்ளது சிறப்பு. முதல் ஷாட்டில் இருந்தே ஏதோ வெஸ்டர்ன் படம் பார்ப்பது போல் அவ்வளவு கிளாஸ். படம் முழுக்க அஜர்பைஜானில் எடுக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். புழுதி வீசும் அஜர்பைஜான் நிலப்பரப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஓம் பிரகாஷின் கேமரா. ஆக்ஷன் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் அஜித் - அர்ஜுன் மோதிக் கொள்ளும் இடங்களில் ‘மங்காத்தா’ எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே.
மைனஸ்:
ஒட்டுமொத்த படத்துடன் ஆடியன்ஸை ரிலேட் செய்ய, அஜித் த்ரிஷா இடையிலான காதல் காட்சிகள் போதுமானதாக இல்லை. மேலும் வில்லன் யார் ? அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இந்த படத்தில் ஆர்வத்தை தூண்டக்கூடிய அம்சம். ஆனால் அதையும் கோட்டை விட்டுள்ளனர். அத்தனை கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தும் எந்த கதாபாத்திரத்திற்கும் வெயிட்டான ஒரு ரோல் கிடையாது. அனிருத்தின் பின்னணி இசை, ஒரே டிராக்கை பல இடங்களில் மாற்றி மாற்றி பயன்படுத்தப் பட்டிருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வளிக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இருந்தால் ஒரு நேர்த்தியான த்ரில்லர் படமாக வந்திருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் விடாமுயற்சி சிலருக்கு திருவினையாக்கும் சிலருக்கு ஜவ்வாகும்.