Viduthalai (Photo Credit: @kalaipoongavij1 X)

ஜூலை 17, சென்னை (Cinema News): கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை (Viduthalai). இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி காவல் அதிகாரியாக நடிக்க இவருக்கு எதிரான கதப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் மெகா ஹிட்டானது இந்த திரைப்படம். Gold Rate Rises In India: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!

விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக்: விடுதலை ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் மொத்தமாகவே முடித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார். அதோடு விடுதலை 2-வில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.