ஜனவரி 07, கோடம்பாக்கம் (Cinema News): இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman) நேற்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடினார். ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதுவரை இளையராஜா கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமாவை, மெல்ல மெல்ல ஏ.ஆர்.ரகுமான் எனும் இசைப்புயல் ஆக்கிரமித்தது. இவர் இசையமைத்த முதல் படமே பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி, அப்படத்தின் பாடல் காலம் கடந்து கொண்டாடப்படும் மாஸ்டர் பீஸ் பாடல்களாக மாறியது. 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ரகுமான், இன்றளவும் நம்பர் 1 இசையமைப்பாளர் ஆக இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து:
இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லாக் கலைஞன், இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமானுக்குஎன் உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!.. இசைபட வாழ்க! " என்று தெரிவித்துள்ளார். Kadhalikka Neramillai Third Single: "உன் கொலவெறி இனிமே வேண்டாம், என் முகவரி இனிமே நான்தான்.." காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு.!
நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்:
இதற்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரகுமான் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், "மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அன்பார்ந்த, ஊக்கமளிக்கும் உங்கள் சொற்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எனக்கு மிகவும் நெருக்கமானவை, முதன்மையானவை உங்கள் வாழ்த்துகள். இசை இதயங்களை இணைக்கும் மொழி. இவ்வழியில் பங்களிக்க, பயணிக்க பணிவுடன் இயங்குகிறேன். நீங்கள் இதே தொலைநோக்குச்சிந் தனையுடனும் அன்புடனும் தமிழ்நாட்டை வழிநடத்த நான் மனமார வாழ்த்துகிறேன்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏ. ஆர். ரகுமான் நன்றி கூறிய பதிவு:
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு, அன்பார்ந்த, ஊக்கமளிக்கும் உங்கள் சொற்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எனக்கு மிகவும் நெருக்கமானவை, முதன்மையானவை உங்கள் வாழ்த்துகள். இசை இதயங்களை இணைக்கும் மொழி. இவ்வழியில் பங்களிக்க, பயணிக்க பணிவுடன் இயங்குகிறேன். நீங்கள் இதே… https://t.co/Tuw1Hx7Cbe
— A.R.Rahman (@arrahman) January 6, 2025