Bluesattai Maran | Indian 2 Movie Poster (Photo Credit: @tamiltalkies / @shynu_mash X)

ஜூலை 10, சென்னை (Cinema News): கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் (Director Shankar) இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் (AR Rahman) இசையில், நடிகர்கள் உலகநாயகன் கமல் ஹாசன் (Kamal Hassan), மனிஷா கொரியாலா, ஊர்மிளா, சுகன்யா உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் இந்தியன் (Indian 1996 Tamil Film). அன்றைய மதிப்பில் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், ரூ.35 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்தது. ஊழலை எதிர்த்து சுதந்திர போராட்ட வீரர் நடத்திய அதிரடி காட்சிகள் கொண்ட படம் பிரம்மிக்க வைத்தது.

இந்தியன் 2 திரைப்படம்:

அப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இந்தியன் படத்தின் 2ம் (Indian 2 Movie) பாகம் தயாராகி இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வழங்கியுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில், நடிகர்கள் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்க வெளியாகவுள்ள திரைப்படமே இந்தியன் 2. Thangalaan Trailer Release Date: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. நடிப்பு அரக்கன் விக்ரமின் ஆட்டம் ஆரம்பம்..!

ஊழலை எதிர்க்கும் இந்தியன்:

இரண்டு பாகமாக தயாராகியுள்ள இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை தொடர்ந்து, மூன்றாவது பாகம் 2025ல் வெளியாகிறது. ரூ.250 கோடி செலவில் தயாராகியுள்ள இந்தியன் 2 திரைப்படம், பல பிரச்சனை கடந்து 12 ஜூலை 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. 96ல் ஊழலை எதிர்த்து போராடியதைப்போல, 2024ம் ஆண்டிலும் நாயகன் ஊழலை எதிர்த்து தனது போராட்டத்தை திரையில் தொடர்கிறார். அதனை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் பேச்சு:

இந்நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் இறுதிக்கட்ட விளம்பர பணிகள் உச்சம்பெற்றுள்ள நிலையில், படத்தின் நடிகர்கள், இயக்குனர், தயாரிப்புத்தரப்பு என தனித்தனியே பேட்டிகள் தொடருகின்றன. அந்த வகையில், நடிகர் சித்தார்த் கமல் ஹாசனுடன் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், "இந்தியன் 2 & 3 பாகத்தில் எனக்கு ஏதும் பிடிக்கும் என்றால், 4ம் பாகம் தான். நான் அதில் நடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

புளூசட்டை கலாய்:

இதனை மேற்கோளிட்டு கலாய்த்துள்ள திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன், "என்னது பாகம் 4 வேற வருதா? அதுல எப்படி.. செவ்வாய் கிரகத்து ஊழலை ஒழிக்க போறாரா?" என கலாய்த்து இருக்கிறார். இந்த பதிவுகள் வைரலாகி வருகிறது. அதேபோல, மறுபக்கம் பிரம்மாண்டங்களின் இயக்குனர் சங்கரின் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் வெளியான பின்பு புளூசட்டை மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்தும் ஒருதரப்பு ஆவலுடன் காத்திருக்கிறது.

புளூசட்டையின் கலாய்:

இந்தியன் 2 திரைப்படத்தை திரையரங்கில் காணுங்கள்: