Jin (Photo Credit: @jiniya_love X)

ஜூலை 03, தென் கொரியா (Television News): தென்காரிய நாட்டை சேர்ந்த கே பாப் பாடகர் குழுவான பிடிஎஸ் (BTS) தனக்கென்று உலகம் முழுவதும் ஒரு ஆர்மியை வைத்துள்ளது. அவர்களின் பாடலைக் கேட்க பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ராணுவத்தில் சேர்ந்த பிடிஎஸ்: தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் ஆவது பணிபுரிந்து ஆக வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதனைத் தொடர்ந்து கே பாப் பிடிஎஸ் குழுவில் இருக்கக்கூடிய ஜின், ஜே-ஹோப், சுகா, ஆர்எம், வி, ஜிமின் மற்றும் ஜங்கூக் ஆகிய ஏழு பேரும் ராணுவத்தில் இணைந்தனர். ராணுவ பணியில் இணைந்துள்ள இவர்கள் ஏழு பேரும் மீண்டும் எப்போது யூடியூப் வருவார்கள் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மீண்டும் 2025 ஆம் ஆண்டு தங்களது ராணுவ பணிகளை முடித்துவிட்டு, பாடும் பணியை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது. Brazil Flood: பிரேசில் வெள்ளம்.. 179 பேர் பலி.. மாயமான 33 பேர்.. தொடரும் மீட்புப்பணிகள்..!

ரியாலிட்டி சோவில் ஜின்: இந்நிலையில் ஜின்னின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் வெளியே வந்தார். தொடர்ந்து, பிடிஎஸ் தொடங்கி 11 ஆண்டுகள் ஆனதையடுத்து கொண்டாடப்பட்ட 2024 BTS Festa என்ற விழாவில் கலந்துகொண்டார். தற்போது,“The Half-Star Hotel in Lost Island” என்ற ரியாலிட்டி ஷோவின் 10வது எபிசோட்டில் ஜின் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.