ஆகஸ்ட் 07, சென்னை (Cinema News): ஆண்டவர் என்றழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் (Kamal Haasan) குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி உலக சினிமா ரசிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய திறமையால் உலகநாயகன் என்ற பெயர் வாங்கி சினிமாவில் வெற்றிக்கொடியுடன் பறந்து வருகிறார். சின்னத்திரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கடந்த ஏழு சீசன்ங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை (Bigg Boss Tamil 8) தொகுத்து வழங்கி இருந்தார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார்.
பிக்பாஸ்: தற்போது இந்தியன் 3, தக் லைஃப், கல்கி 2898 ஏ.டி. மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸில் வரும் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். Thangalaan Audio Launch: நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட இயக்குனர் பா. ரஞ்சித்; நெகிழ்ந்துபோன சியான்.. நெகிழவைக்கும் தங்கலான் இசை வெளியீட்டு விழா.!
முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களின் வழியே வந்து உங்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அன்பையும், பாசத்தையும் பொழிந்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்குப் போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவே அடிப்படை காரணம்.
தனிப்பட்ட முறையில் உங்கள் தொகுப்பாளராக இருந்தது சிறப்பான ஒன்று. அங்கு நான் எனது கற்றலை நேர்மையாகப் பகிர்ந்து கொண்டேன். இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு என்னுடைய மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக பாடுபட்ட விஜய் டிவி குழுவினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் மற்றொரு வெற்றி சீசனாக இருக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
என்றும் உங்கள் நான்.@vijaytelevision pic.twitter.com/q6v0ynDaLr
— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2024