டிசம்பர் 19, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தர்ஷிகா, சத்யா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Stunt Master Kothandaraman Passed Away: ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!
கட்டுமான டாஸ்க்:
இந்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். மேலும், நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்லின், பவித்ரா, அருண், ரஞ்சித், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, அன்சிதா, ராணவ், ராயன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வாரம் கட்டுமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்ட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்க உள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரொமொவில் அன்சிதா, பவித்ரா மேல் உட்காந்து கொண்டு ஜாக்கிலினை வா வா என்று அழைக்க ஜாக்கிலின் அடிக்க பாய்கிறார். இந்த நிலையில் பவித்ராவின் நிலை பற்றி யாரும் யோசிப்பதாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை அன்ஷிதா வெளியேறுவதைப் போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.