ஜனவரி 26: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் (Vijay Television) ஒளிபரப்பாகி, தமிழக மக்களை கொரோனா (Corona Lockdown) காலகட்டத்தில் சிரிக்க வைத்து, அவர்களை ஊரடங்கு மன அழுத்தத்தில் இருந்து விடுவித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி (Cook With Comali). இந்த நிகழ்ச்சிக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் சீசனில் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar), இரண்டாவது சீசனில் கனி திரு (Kani Thiru), மூன்றாவது சீசனில் சுருதி அர்ஜுன் (Shuruthi Arjun) ஆகியோர் வெற்றி அடைந்தனர். இவர்களில் வனிதாவுக்கு ரூ.3 இலட்சமும், பிற இருவருக்கும் ரூ.10 இலட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் (Cook With Comali Season 4) படப்பிடிப்புகள் நடைபேற்று வந்த நிலையில், ஜனவரி 28ம் தேதி முதல் வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இரவு 09:30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. Instagram Biker: நடுரோட்டில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த இளைஞருக்கு வலைவீசிய காவல்துறை.. இன்ஸ்டா பதிவை போலீசுக்கு பார்வேட் செய்த சமூக ஆர்வலர்.
சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..
இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. 🔥😎 #CookuWithComaliSeason4 வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookuWithComali4 #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/yPaUEMLG0Q
— Vijay Television (@vijaytelevision) January 26, 2023
Fun வேணுமா Fun இருக்கு.. 😍
Fun வேணுமா Fun இருக்கு.. 😍😀 #CookuWithComaliSeason4 வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookuWithComali4 #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/VYpdt1oWhC
— Vijay Television (@vijaytelevision) January 25, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)