Abuse (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 07, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் (Ahmedabad) திருமண விழாவில் 17 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பான, 10 மாத கால விசாரணை, கடந்த பிப்ரவரி 03ஆம் தேதி முடிவடைந்தது. பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் (Sexual Assault) ரீதியாக துன்புறுத்திய எச்.ஐ.வி. பாசிட்டிவ் நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆரம்பத்தில் 17 வயது சிறுமியை பரேஜாவில் உள்ள ஒரு வாடகை அறையில் வைத்திருந்ததாகவும், அவரது தாயார் மற்றும் சகோதரர் அவர் இருக்கும் இடத்தை மறைக்க உதவியதாகவும் கூறப்படுகிறது. Ahmedabad Shocker: 14 வயது மகள் பலமுறை பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தை கைது..!

கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை:

மேலும், உணவு முறையாக கொடுக்காமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை கொடுமைப்படுத்தி சூரத், ஔரங்காபாத், பீட், ஹைதராபாத், நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு மாற்றினார். குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு முன்பு 6 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஏழு பேருக்கும் எச்.ஐ.வி (HIV) தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.