செப்டம்பர் 19, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் சாந்திவான் (Shantivan) பகுதியில் கார் விபத்துக்குள்ளானதில், டெல்லி பல்கலைக்கழக (Delhi University) மாணவர்கள் 4 பேர் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, குருகிராமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவரில் (Road Accident) மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது. One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுனர் தனது மொபைல் போனில் பாடலை மாற்ற முயன்றதாகவும், அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டு சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில், 4 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கார் விபத்துக்குள்ளான வீடியோ:
#WATCH | 5 people including 4 students of Delhi University suffered injuries and were admitted to hospital after their car met with an accident in the Shantivan area of Delhi. They were returning from Gurugram after celebrating the birthday of one of the injured. Initial… pic.twitter.com/Yjew3mGfk8
— ANI (@ANI) September 19, 2024