மே 23, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், உஜானி அணைக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே படகு சேவை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பொழிந்துள்ளது. இந்த சூழலில், 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒன்று கவிழ்ந்து (Boat Capsize) விபத்து ஏற்பட்டது. Infinix Note 40 5G: இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட் போன் உலக சந்தையில் அறிமுகம்..! முழு விவரம் உள்ளே..!
இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், படகில் சென்ற 4 ஆண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 7 பேரில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில், உதவி காவல் அதிகாரி ஒருவர் மட்டும் நீரில் நீந்தி கரைக்கு வந்து உயிர்பிழைத்துள்ளார்.
இந்நிலையில், விபத்தில் இறந்து போன 6 பேரில் 5 பேரின் சடலத்தை மட்டுமே மீட்டுள்ளனர். இன்னும் ஒருவரின் உடலை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.