ஜூலை 31, வயநாடு (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் நிகழ்ந்த கடும் நிலச்சரிவு (Wayanad Landslide) காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய பலரின் உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Teenager Argument With Hotel Management: கெட்டுப்போன பார்சல் உணவு; ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!
இந்நிலையில், தமிழகத்தின் தேனி பகுதியை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள், கேரளாவில் உள்ள முண்டக்கையில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டபோது, இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம், விமானப்படை ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்த நீலகிரி மாவட்டம், பந்தலூரைச் சேர்ந்த கல்யாண்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.