ஜனவரி 27, கோழிக்கோடு (Kerala News): கேரள மாநிலம், வயநாட்டில் (Wayanad) உள்ள கல்பேட்டா பகுதியில் பாடி ஷேப் எனும் உடற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு அனீஷா என்பவர் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது ஜிம்மில் இருப்பவர்கள், தங்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து, கோழிக்கோடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு திக்கோடி பகுதியில் உள்ள பீச்சில் சுற்றுலா சென்றவர்களில் 5 பேர் குளித்துள்ளனர். Kuch Kuch Hota Hai: ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சரவை குழு; இந்திய பயணத்தில் சுவாரஷ்யம்.!
நீரில் மூழ்கி பலி:
அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால், அவர்கள் நீரில் மூழ்கினர். அதில், அனீஷா (வயது 38) உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் பினீஷ் (வயது 45), பைசல் (வயது 42), வாணி (வயது 32) என அடையாளம் காணப்பட்டனர். இதில், ஜின்ஷி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.