ஏப்ரல் 04, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மண்ணந்தலை பகுதியில் ரகசிய இடங்களில் சில நபர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென நாட்டு வெடுகுண்டுகள் (17 Year Old Boy Lost Both Hands In Bomb Blast) வெடித்து சிதறியது. இதில் நெடுமங்காட்டை சேர்ந்த சிறுவனின் (வயது 17) இரு கைகளும் பறிபோனது. உடன் இருந்த அகிலேஷ் (வயது 18) என்ற வாலிபருக்கு படுகாயமும், சரத் மற்றும் கிரண் ஆகியோருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், சரத் மற்றும் கிரண் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். School Teacher Rapes Young: 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் போக்சோவில் கைது..!
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கை துண்டாகி உயிருக்கு போராடி வந்த 17 வயது சிறுவனையும், அகிலேஷ் என்பவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற சரத், கிரண் ஆகியோரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் மீதும் ஏற்கனவே சைக்கிள் திருட்டு வழக்கு இருப்பதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.