Pit Bull Dog (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 30, கோவா (Goa News): கோவாவில் உள்ள அஞ்சுனா (Anjuna Village) கிராமத்தில் தனது தாயுடன் நடந்து சென்ற 7 வயது சிறுவன், பிட் புல் (Pit Bull) நாய் கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 29) பிரபாஸ் கலங்குட்கர் (வயது 7) என்ற சிறுவன், தனது தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டில் வளர்த்த பிட்புல் நாய் (Dog Bite) அந்த சிறுவனை கடித்தது. Ola Driver Slaps: ஓலா கார் ஓட்டுநரை திரைப்பட பாணியில் தூக்கிப்போட்டு வெளுத்த கும்பல்; லேசாக உரசியதால் ஆடி கார் கும்பல் பகீர்.!

இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது மகனை மீட்டு கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, நாயின் உரிமையாளர் அப்துல் காதர் குவாஜா என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.