ஏப்ரல் 20, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜே.பி.நகர் அருகே உள்ள சாகாம்பரி நகரில் வசித்து வருபவர் கீதா. இவருக்கு அனுஷா (வயது 25) என்ற மகள் உள்ளார். இவருக்கும், கொரகுன்டேபாளையாவை சேர்ந்த சுரேசுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், சுரேசிற்கு திருமணம் முடிந்து, 2 குழந்தைகள் இருந்தும் இவர் அனுஷாவுடன் கள்ளத்தொடர்பில் (Forgery) இருந்துள்ளார். இதனையடுத்து, அனுஷா அவருடனான தொடர்பை நிறுத்தியுள்ளார். இதனால், நேற்று முன்தினம் சாரக்கி பூங்காவில் சுரேஷ் அனுஷாவை கத்தியால் (Knife) சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். Satellites Launch: ஸ்பேஸ் எக்ஸ்-நாசா கூட்டணி; 23 செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை..!

உடனடியாக, தனது மகளை கத்தியால் குத்திய சுரேஷை அருகில் கிடந்த கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக, ஜே.பி.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கீதாவிடம் விசாரணை நடத்தினர். அதில் நடந்தவற்றை அனைத்தையும் கூறியுள்ள கீதா, தனது மகள் திருமணமானவருடன் பழகியுள்ளது நாளடைவில் தெரிய வர அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து பழகத்தை நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, சுரேஷ் அனுஷாவின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து, சுரேஷின் மனைவியிடம் இவர்கள் இருவரும் கூறியுள்ளனர். இதனால் இரு குடும்பத்திற்கு இடையே பிரச்சனைகள் நடந்துள்ளது. மேலும் ஆர்.எம்.சி. யார்டு காவல்நிலையத்தில் சுரேஷ் மீது இதுபற்றி புகார் கொடுத்துள்ளனர். அங்கு, இருதரப்பையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அனுஷா தன்னை விட்டு பிரிந்த ஆத்திரத்தில், சுரேஷ் கடைசியாக ஒரு முறை உன்னை பார்த்து பேச வேண்டும் என்று கூறி, சாரக்கி பூங்காவிற்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், கீதா கல்லால் அடித்து சுரேஷை தாக்கியுள்ளார். விசாரணையின் முடிவில் கீதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.