ஏப்ரல் 20, வாஷிங்டன் (World News): உலக நாடுகள் அனைத்தும் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு முயற்சிகளை சோதித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக செயற்கைக்கோள்களை அனுப்பும் முயற்சியில் போட்டிப்போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. The Boat Capsized: படகு கவிழ்ந்து விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் மாயம்..!

இந்த நிலையில், அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற நிறுவனமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து, கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நாசாவுடன் (NASA) இணைந்து பால்கன்-9 வகை ராக்கெட்டை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளது. இவை அதிவேகமான இணைய சேவைகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கைக்கோள்கள் அதன் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.