ஆகஸ்ட் 11, கோழிக்கோடு (Kerala News): கேரள மாநிலம், கோழிக்கோடு (Kozhikode) அருகே குன்னமங்கலத்தைச் சேர்ந்த 48 வயதான முகமது மஷ்ஹூர், பேய் விரட்டுதல் உள்ளிட்ட மந்திரவாதங்களைச் செய்து வந்தார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். அந்தவகையில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், முகமது மஷ்ஹூரை அணுகியுள்ளார். கள்ளக்காதலுக்காக கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்:
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மஷ்ஹூர், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். இந்த அத்துமீறலை வெளியே யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அப்பெண், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குன்னமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணை:
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முகமது மஷ்ஹூரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது மஷ்ஹூர் மீது இதுபோல பல புகார்கள் ஏற்கனவே உள்ளன. முன்பு, அத்தோளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை பலாத்காரம் செய்ததோடு, மிரட்டி 40 பவுன் நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தைப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3