Poison / Alcohol (Photo Credit : Pixabay / Youtube)

ஆகஸ்ட் 11, கரீம்நகர் (Telangana News): தெலங்கானா மாநிலம், கரீம்நகர் (Karimnagar) மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 45). இவரது மனைவி ரமாதேவி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சம்பத், அங்குள்ள நூலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை 29 அன்று, சம்பத் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது மகன் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பத்தின் மனைவி ரமாதேவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசிய 2வது மனைவி.. கதறித்துடித்த கணவன்.!

கணவர் கொலை:

இதுகுறித்த விசாரணையில், ரமாதேவிக்கு கிசான் நகரைச் சேர்ந்த ராஜய்யா (வயது 50) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த சம்பத், தனது மனைவியை கண்டித்துள்ளார். ரமாதேவி தனது கள்ளக்காதலை கைவிடாததால், சம்பத் மதுப் பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து ரமாதேவியைத் தாக்கியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ரமாதேவி, தனது கள்ளக்காதலன் ராஜய்யாவுடன் சேர்ந்து சம்பத்தைக் கொலை (Murder) செய்யத் திட்டமிட்டார். இத்திட்டத்தில் ராஜய்யாவின் உறவினர் ஸ்ரீனிவாஸ் (வயது 35) என்பவரும் இணைந்துள்ளார்.

மூவர் கைது:

இந்நிலையில், திட்டமிட்டபடி மூவரும் சம்பத்தை பொம்மக்கல் மேம்பாலத்திற்கு வரவழைத்து மது குடிக்க வைத்துள்ளனர். சம்பத் போதையில் இருந்தபோது, ரமாதேவி, ராஜய்யா, ஸ்ரீனிவாஸ் ஆகிய மூவரும் சம்பத்தின் காதில் விஷத்தை ஊற்றி அவரைக் கொலை செய்தனர். பின்னர், சம்பத்தின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு, மூவரும் அங்கிருந்து தலைமறைவாகினர். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, மூன்று பேரையும் காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 10) கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.