Family Suicide (Photo Credit :@galgotiastimes X)

மே 27, பஞ்சகுலா (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுலா பகுதியில் சாலையோரம் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகத்திற்கிடமான வகையில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்ற காரில் ஏழு பேர் இருந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் இதனை கவனித்தபோது ஏழு பேரும் மூச்சு பேச்சின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் காரின் கதவை திறந்து பார்த்தபோது ஏழு பெரும் உயிரிழந்தது தெரிய வந்தது. குதிரையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. சிசிடிவியில் அம்பலமான உண்மை.! 

விஷம் குடித்து உயிரை மாய்த்த குடும்பம் :

இதனையடுத்து அனைவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர்? எங்கிருந்து வந்தார்கள் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.