ஏப்ரல் 08, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் சாலையோர கடையில் ஜெய்ஸ்ரீ (வயது 24) என்ற இளம்பெண், தனது தோழியுடன் சேர்ந்து புகைப்பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த கடைக்கு ரஞ்சித் (வயது 28) என்ற இளைஞர் வந்துள்ளார். இவர், புகைபிடித்து கொண்டிருக்கும் அந்த இளம்பெண்ணை, முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்ஸ்ரீ, ரஞ்சித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். புகைபிடித்துக்கொண்டே அந்த புகையை ரஞ்சித் முகத்திற்கு நேராக விட்டுள்ளார். இதனை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது. Cashew Cake: முந்திரி கேக் செய்வது எப்படி..? – விவரம் உள்ளே..!

கடும் கோபத்தில் இருந்த ஜெய்ஸ்ரீ, ரஞ்சித்தை தாக்குவதற்காக தனது நண்பரான ஆகாஷ் என்பவரை அழைத்துள்ளார். ரஞ்சித் தனது வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பியுள்ளார். அப்போது அவரை மடைக்கி பிடித்து ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அடித்து தாக்கியுள்ளனர். இதில் ஜெய்ஸ்ரீ தான் வைத்திருந்த கத்தியை (Stabbing to death) எடுத்து பலமுறை ரஞ்சித்தை குத்திவிட்டு, 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதில், ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்த தகவலறிந்து வந்த காவல்துறையினர், ரஞ்சித் செல்போனில் இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு, கொலை செய்த ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பர்கள் சவிதா, ஆகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.