ஏப்ரல் 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம், விரார் பாலிவாலி கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் இம்ரான் என கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு (Murder Case) செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். Elephant Tusks Smuggling: யானை தந்தம் கடத்தல் விவகாரம்; வாகன சோதனையில் மடக்கி பிடித்த வனத்துறையினர் – மேலும் 2 பேருக்கு தொடர்பு..!

விசாரணையில் நாலாச்சோப்ரா பெல்கார் பகுதியை சேர்ந்த பரன் சாவ் (வயது 50) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இம்ரான் மனைவிக்கும், பரன் சாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை இம்ரான் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பரன் சாவ், அவரை கொலை செய்ய முடிவு எடுத்து, தனது நண்பர்களான முபாரக் அலி, பத்தா ஆகியோர் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளார்.

சம்பவ நாளன்று, இம்ரானை இவர்கள் மூவரும் சேர்ந்து ஆட்டோவில் கடத்தி சென்று நாலாசோப்ராவில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர், விரார் பாலிவாலி பகுதியில் வீசி எரிந்து விட்டு சென்றுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, கொலை செய்த குற்றவாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.