செப்டம்பர் 25, புதுடெல்லி (Technology News): திட்டமிட்டபடி ரயில் பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் அல்லது சீட்டிங் உறுதியாகாத நிலையில் முன்பதிவு செய்து வைத்திருந்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ய நேரிடுகிறது. ஆனால், அப்படி கேன்சல் செய்யும் போது எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. இதனால் எப்போது கேன்சல் செய்தால் இழப்பு குறையும் என்பதும் தெரிவதில்லை.
எவ்வளவு பிடித்தம்?:
ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது வரி, சேவைகளுக்காக சிறிது கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது இயல்பானதே. அதிலும் ஆப்கள் மூலம் முன் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டு மீதி மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் டிக்கெட் கேன்சல் செய்தால் அதன் கட்டணம், நேரம், எந்த வகுப்பு ஆகியவைப் பொறுத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. 2-ம் வகுப்புக்கு, 48 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.60 பிடிக்கப்படும். ஏசி2 டைர்/ ஃப்ர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு ₹200 கட்டணமும், ஏசி 3 டைர், ஏசி சேர் கேர், ஏசி - 3 எகானமி ஆகிய வகுப்புகளுக்கு, டிக்கெட் ரத்து கட்டணமாக ₹180 வசூலிக்கப்படும். AkzoNobel Layoffs: அக்ஸோநோபல் நிறுவனத்தின் ஊழியர்களில் 2,000 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன?!
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல்:
கேன்சலேசனுக்காக அபராதக் கட்டணம் 48 மணிநேரம் முன்னதாக குறைவாகவும், 12 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தால் பிடித்தத்தில் மாறுபடுகள் ஏற்படும். இந்த நேரத்தில் டிக்கெட் தொகையில் இருந்து சுமார் 25 சதவீதம் வரை அபராதமாக பிடித்தம் செய்யப்படும். அதுவே, 12 மணி நேரத்திற்கும் குறைவாக மற்றும் 4 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், 50 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும். இது அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கு பொருந்தும். வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளின் டிக்கெட்டுகள் கேன்சல் செய்தால், அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது, முழுவதுமாக ரிட்டர்ன் செய்யப்படும்.