ஏப்ரல் 16, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பென்னிகானஹள்ளி பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் (Metro Station) உள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைபாலத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். Cannabis Atrocity: கஞ்சா போதையில் அதிகாரிகளை உறவுக்கு அழைத்த பெண்; நிர்வாணமாக பரபரப்பு செயல்.!

இந்நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் பதற்றமடைந்து அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர், இதைப்பற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் நிலைய ஊழியரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த மர்மநபரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் குடிபோதையில் இருந்ததும், இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.