மே 27, குருகிராம் (Haryana News): அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே சதார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திக்ரி கிராமத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதியில், நேற்று முன்தினம் இரவில் 22 வயது பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் மற்றும் கைரேகை குழுவினருடன் சேர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றனர். Shah Rukh Khan Chants CSK Slogan: கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுடன் "சிஎஸ்கே" "சிஎஸ்கே" என கோஷமிட்ட ஷாருக்கான்..!
அப்போது, அந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை (Stabbed To Death) செய்துள்ளது தெரியவந்தது. அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, நேற்று சதார் காவல்நிலையத்திற்கு வந்த ஒரு நபர் அந்த இளம்பெண்ணை நான்தான் கொலை செய்தேன் எனக்கூறி சரணடைந்துள்ளார். பின்னர், விசாரணையில் அவர்கள் இருவரும் மராட்டிய மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண் இவர்மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து, மேலும் தன்னை மிரட்டி வந்துள்ளார் என்று கூறினார். இந்நிலையில், சம்பவ நாள் அன்று இவரை சந்திக்க அந்த இளம்பெண் குருகிராம் வந்துள்ளார்.
அப்போது, இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரத்தில் அந்த நபர் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக கொலை செய்த அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.