ஆகஸ்ட் 09, டெல்லி (Delhi News): இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் (Reliance Industries) நிறுவனத்தில் 11 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 42,000 பேரை பணிநீக்கம் (Layoffs) செய்துள்ளது. இந்த 2024-25 நிதியாண்டில் 11 சதவீதம் பணியாளர்களை அந்நிறுவனம் குறைத்துள்ளது. முந்தைய நிதியாண்டை விட 2023-24 நிதியாண்டில் நிறுவனம் தனது ஊழியர்களை 42,000 ஆக குறைத்துள்ளது. அதேபோல, புதிய ஊழியர்களைப் பணியமர்த்துவதையும் குறைவான அளவில் வைத்திருக்கிறது. Five Children Dies By Blast: யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்த பிஞ்சுகள்.. திடீர் வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!
ஊழியர்கள் பணிநீக்கம்:
ரிலையன்ஸ் நிறுவனம், அதிகமான செலவுகளைக் குறைப்பதற்காக குறைவான ஆட்சேர்ப்புகளைச் செய்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ரிலையன்ஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 3,89,000 ஆக இருந்தது. இது 2023-24 நிதியாண்டில் 3,47,000 ஆகக் குறைந்துள்ளது. சுமார் 42,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, இந்த 2024-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் புதிய நியமனங்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்து 1,70,000 ஆக வைத்துள்ளது.
சில்லறை வர்த்தகம் சரிவு:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் (Retail Trade) பல்வேறு சறுக்கல்களை கண்டுள்ளதால், பணியாளர்களை குறைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 60 சதவீதம் அளவுக்கு ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் பங்கு வகிக்கிறது. 2023-ஆம் நிதியாண்டில் சில்லறை விற்பனை பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 2,45,000 ஆக இருந்தது. இந்த 2024-ஆம் நிதியாண்டில் அதன் எண்ணிக்கை 2,07,000 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.