ஜூன் 19, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் (Nalanda University). பண்டைய இந்தியாவின் புகழ் கூறும் இந்த பல்கலைக்கழகத்தில் சீனர்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், திபெத்தியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து அறிஞர்களாக திகழ்ந்தனர். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம். கி.பி. 413 முதல் சிறப்பாக செயல்பட்ட இந்த பல்கலைக்கழகம், படையெடுப்பாளர்களால் மூன்று முறை தாக்கப்பட்டு, இரண்டு முறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. World Sauntering Day 2024: "வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்.. ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது" உலக சாண்டரிங் தினம்..!
புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி: இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "இது நமது கல்வித் துறைக்கு மிகவும் சிறப்பான நாள். நமது புகழ்க்கும் நாளந்தாவுக்கும் வலுவான தொடர்பு உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீண்ட தூரம் செல்லும்." என்றார். மேலும் இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
#WATCH | Nalanda, Bihar: Prime Minister Narendra Modi unveils a plaque at the new campus of Nalanda University as he inaugurates the campus. The PM also planted a sapling here. pic.twitter.com/LUtRN02Jxy
— ANI (@ANI) June 19, 2024