அக்டோபர் 15, சென்னை (Special Day): இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி உலக மாணவர்கள் தினமாக (World Students' Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக உலக இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வாழ்நாள் முழுக்க மாணவர்கள் மத்தியில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய அப்துல் கலாம் (A.P.J. Abdul Kalam) பிறந்த நாள் ஐநா சபையால் 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. Global Handwashing Day 2024: "வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க.." இன்று உலக கை கழுவுதல் தினம்.!
அப்துல் கலாமின் கனவு: தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் , ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானியாகி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகி, குடியரசுத் தலைவராக உயர்ந்து 2015ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (DRDO) ஆகியவற்றில் பதவிகள் வகித்தார். இளைஞர்கள், மாணவர்களிடத்தில் அவர் நிகழ்த்திய உரையாடல், மரபாக ஒரு குடியரசுத் தலைவர் நிகழ்த்தும் உரையாடலின் எல்லையைக் கடந்து மிக நெருக்கமாக உணரப்பட்டது. நம்பிக்கை என்பது ஒரு சாவி. அது நமக்குக் கிடைத்துவிட்டால் எந்த சிக்கலான பூட்டையும் எளிதாகத் திறந்துவிடலாம். அந்த நம்பிக்கையைக்கூடச் சிலரால்தான் அழகாக ஊட்ட முடியும். அந்த அரிய காரியத்தை அழகாகச் செய்தவர் தான் கலாம்.
தலைமைக்குத் தயாராகும் மாணவர்கள்:
தலைமைக்குத் தயாராகும் மாணவர்கள் -அடுத்த தலைமுறைக்கு கலாசாரத்தை எடுத்துரைக்கும் போராளிகள் !
மாணவர்களின் தலைமை
ஊழலை உழைத்திடும் புதுமை !
சாதியை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தும் வீரர்கள் !
வீழ்ச்சியை வெற்றியாக
மாற்றும் சக்தி
மாணவர்களின் தலைமை சரியாக இருக்கும்
சரித்திரத்தில் அவர்கள் புகழ் பறக்கும்
பசியில் வாடும் மக்களுக்கு உணவினை கொடுக்கும் நாளைய உழைப்பாளிகள் :
அறியாமையில் தத்தளிக்கும் மக்களுக்கு
பகுத்தறிவை புகட்டும் பகுத்தறிவாளர்கள்
மாணவர்களின் தலைமை மாற்றத்தை தரும்
மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்
நம் திருநாட்டில்
தலைமைக்கு தயாராகும் மாணவர்களே
நாளைய சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள் - மக்களின் தலைவனாக !
- கவிதைக்கு நன்றி, பூமணி.