Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூலை 06, ஜாலஹள்ளி (Karnataka News): கர்நாடக மாநிலம், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள சுசுலஹகலி தாலுகாவில் பசப்புரா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (வயது 22). இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு சுனில் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். Ganja Sellers Arrested: 7 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 4 பேர் கைது..!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை (Dowry Cruelty) வாங்கி வரும்படி தகராறு செய்து வந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, சுனிலின் சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் பூஜாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதன்காரணமாக மிகவும் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த கங்கம்மனகுடி காவல்துறையினர், பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வரதட்சணை கொடுமையால் தான் பூஜா தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.