Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

பிப்ரவரி 06, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், யாத்கீர் (Yadgir) மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 05) நடந்த ஒரு துயர சம்பவத்தில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். சூரபுரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திந்தானி ஆர்ச் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், ஐந்து பேரும் சூரபுராவில் இருந்து திந்தானிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. Fire Accident: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரசாயன பேரல்கள் வெடித்து சிதறல்.. விஷவாயு பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்..!

பைக் மீது பேருந்து மோதி விபத்து:

கல்யாண் கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு (KKSRTC) சொந்தமான பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து (Bike - Bus Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி இருசக்கர வாகனம் முற்றிலுமாக நொறுங்கியது. இதில், உயிரிழந்தவர்கள் ஆஞ்சநேயா (வயது 35), அவரது மனைவி கங்கம்மா (வயது 28), அவர்களது குழந்தைகள் பவித்ரா (வயது 5), ராயப்பா (வயது 3) மற்றும் ஆஞ்சநேயாவின் மருமகன், ஹனுமந்தா (வயது 1) என அடையாளம் காணப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.