ஏப்ரல் 08, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூர் மண்டலம் அடவி கொடியம்பேடு கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ஆறுமுகம்-ராஜம்மா. ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முனுசாமிரெட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராஜம்மாவுக்கு சொந்தமாக 1.48 ஏக்கர் விவசாய நிலம் இருக்கின்றது. இதில், ஒரு ஏக்கரை மூத்த மகனின் பிள்ளை ஹரிகிருஷ்ணாவுக்கு ராஜம்மா எழுதி கொடுத்தார். Prostitution Gang Arrested: ஸ்பா பெயரில் பலான தொழில்: அதிரடி ரைய்டு விட்டு, 4 பெண்களை மீட்ட காவல்துறையினர்.. தரமான சம்பவம்.!
இதனையடுத்து, இளைய மகன் கிருஷ்ணாரெட்டி மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர் சொத்தில் பங்கு வேண்டும் என்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், ஹரிகிருஷ்ணாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஹரிகிருஷ்ணா மற்றும் அவரது தாயார் தேவிகா ஆகிய இருவரும் பிச்சாட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
சம்பவ நாளன்று ராஜம்மா வீட்டில் தனியாக இருந்ததை கண்டு, இளைய மகன் கிருஷ்ணாரெட்டி மற்றும் அவரது மனைவி, மகன்கள் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அவரின் கழுத்தை நெரித்து கொலை (Grandson Killed Grandmother) செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் ராஜம்மாவின் பேரன் இளங்கோவன் (வயது 30) என்பவரை பிச்சாட்டூர் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் தனது பாட்டியை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, இளங்கோவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.