Military (Photo Credit: Pixabay)

 

ஜூன் 19, சென்னை (Chennai): நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இராணுவம் (Army) முக்கியமானதாக இருக்கிறது. தேசத்திற்கு வெளிப்புறத்தில் இருந்து ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து இராணுவம் நம்மை பாதுகாக்கிறது. அமைதியை பராமரித்து சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டுகிறது. குடிமக்களுடைய நல்வாழ்வை உறுதி செய்கிறது.

இதனால் நாடு முன்னேற்றமடைந்து வளர்ச்சி ஏற்படுகிறது. சர்வதேச அளவில் உள்ள அனைத்து நாடுகளும் அவ்வப்போது தனது இராணுவ வரவு-செலவு திட்டங்களினை உயர்த்தி நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகை செய்து கொள்கின்றன.

இராணுவத்தில் பல்வேறு காரணத்திற்காக பயர்பவர் என்பது முக்கியமானதாக இருக்கிறது. வலுவான மற்றும் திறமையான இராணுவம் எதிராளிகளை சமாளித்து வெற்றியை அடையும். அச்சுறுத்தலை தடுக்கவும் உதவும். தேசிய நலனை கருத்தில் கொண்டும், சர்வதேச நலனை கருத்தில் கொண்டு சில விதிமுறைகளும் இராணுவத்திற்குள் நாடுகளுக்கிடையே வகுக்கப்படும்.

Global Firepower என்ற GFP மூலமாக உலகளவில் அதிக பயர்பவர் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி இந்தியா பயர்பவரில் முதல் 4வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய இராணுவத்தில் 45 இலட்சம் பணியாளர்கள், 2182 விமானங்கள், 12000 கவச வாகனங்கள், 4614 டாங்கிகள் மற்றும் பல ஏவுகணைகளும் இருக்கின்றன. 2023-24 ம் நிதியாண்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.554875 கோடி ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவில் எப்போதும் இந்தியாவுடன் வம்புசெய்வதை வழக்கமாக கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகளை பொறுத்தமட்டில் சீனா இராணுவ வலிமையில் 915000 வீரர்களுடன் 3ம் இடத்திலும், பாகிஸ்தான் 654000 பணியாளர்களுடன் 7ம் இடத்திலும் இருக்கிறது. சர்வதேச பயர்பவரில் அமெரிக்கா முதல் இடத்திலும், ரஷியா இரண்டாவது இடத்திலும்,

சீனா மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) ஐந்தாவது இடத்திலும், தென்கொரியா ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும், ஜப்பான் எட்டாவது இடத்திலும், பிரான்ஸ் ஒன்பதாவது இடத்திலும், இத்தாலி பத்தாவது இடத்திலும் உள்ளது. அதேபோல, துருக்கி, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடத்தினை பெற்றுள்ளன.

பண்டைய நாகரீகத்தில் இருந்து இராணுவம், படைபலம், போர்வீரர்கள் என்பவர்கள் தொடர்ந்து அவரவர் நாட்டிற்காக போராடி இருக்கின்றனர். பிற்காலத்தில் போர்கள் நிறைவுபெற்று இராணுவ படைகள் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு நாடு பிடிக்கும் கொள்கை கைவிடப்பட்டு, இராணுவங்கள் சொந்த நாடுகளின் பாதுகாப்புக்கு பணியாற்றி வருகின்றன.