![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1721541086Sexual%2520Harassment%2520Instagram%2520Logo%2520File%2520Pic%2520%2528Photo%2520Credit%2520Pixabay%2529-380x214.jpg)
ஜூலை 21, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மாத்தேரான் பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவருடன் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பழகி வந்துள்ளார். இருவரும் நட்பு ரீதியான பழக்கத்தில் இருந்து (Instagram Boyfriend Rapes 14 Year Old Girl) வந்த நிலையில், கடந்த ஜூலை 12ம் தேதி சிறுமியுடன் நட்புறவில் பழகி வந்த இளைஞர், பிறந்தநாள் விழா என்று கூறி அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பலாத்காரத்தை வீடியோ எடுத்த கொடுமை:
விபரீதத்தை புரிந்துகொள்ளாத சிறுமி தனது நண்பருடன் விடுதிக்கு சென்ற நிலையில், அங்கு சிறுமியின் நண்பர்கள் என 2 பேர் இருந்துள்ளனர். விடுதி அறையில் 20 வயது இளைஞரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட, அதனை இளைஞருடன் வந்த 2 பேர், சிறுமிக்கே தெரியாமல் மறைந்து இருந்து வீடியோ எடுத்து இருக்கின்றனர். பின் சிறுமி வீட்டிற்கு திரும்பிவிட, கடந்த ஜூலை 14ம் தேதி சிறுமி வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. K Armstrong Murder Case: வட்டித்தொழில் முடங்கியதால் ஆத்திரம்; ஆம்ஸ்ட்ராங்கை காத்திருந்து பழிதீர்த்த அஞ்சலை.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
இன்ஸ்டாவில் வெளியான வீடியோ:
உள்ளூர் வட்டாரங்களில் வீடியோ வைரலாக, சிறுமியின் உறவினர் ஒருவர் அதனைக்கண்டு இருக்கிறார். பின் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியப்படுத்த, அவர்கள் மகளிடம் விசாரித்தபோது உண்மை அம்பலமாகி இருக்கிறது. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் (வெள்ளிக்கிழமை) அன்று புகார் அளித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை:
புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், வீடியோ எடுத்த 2 இளைஞர்களை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காட்கோபர் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞனை இன்று கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் பலாத்காரம் பிரிவு (64), 16 வயதுக்கு கீழுள்ள சிறுமி பலாத்காரம் பிரிவு 65(1), கடத்தல் பிரிவு 137(2), இரண்டுக்கும் மேற்பட்டோரால் குற்றச்செயலில் ஈடுபடுதல் பிரிவு 3(6), குற்ற எண்ணத்துடன் செயல்படுதல் பிரிவு 3(5), வற்புறுத்தப்ட்ட பாலியல் பலாத்காரம் பிரிவு 6 , போக்ஸோ பிரிவு 12, பலாத்காரம் தொடர்பான விடியோவை வெளியிட்டதற்காக ஐடி சட்டம் 67A, 67B ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
சிறார் பலாத்காரம், சிறார்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகார் அளிக்க: 1098, புகார் அளிப்பவரின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும்.