மே 16, புதுடெல்லி (NewDelhi): 22 வது பீரியடிக் லேபர் ஃபோர்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, இந்திய நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதமானது 6.7% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி - மார்ச் மாதம் வரையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, 15 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கான வேலையின்மை விகிதம் என்பது நகர்ப்புறங்களில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ம் நிதியாண்டில், மார்ச் காலாண்டு வரை வேலையின்மை விகிதம் என்பது 6.8% என இருந்தது. ஏப்ரல் - ஜூன் மற்றும் ஜூலை - செப்டம்பர் 2023 நிதியாண்டில் வேலையின்மை விகிதம் 6.6% ஆக இருந்துள்ளது. 2023ல் அக்-டிசம்பர் காலாண்டில் 6.5% எனவும் வேலையின்மை விகிதம் இருந்தது. Bus Collied With Lorry: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி.. செங்கல்பட்டில் சோகம்.! 

பெண்கள் & ஆண்களின் வேலையின்மை விகிதம்: நகர்புறத்தில் வசித்து வரும் பெண்களில் 2024 ஜனவரி - மார்ச் வரையிலான மாதங்களில், வேலையின்மை விகிதம் 8.5% ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், இதே காலாண்டில் வேலையின்மை விகிதம் என்பது 9.2% ஆக இருந்துள்ளது. 2023 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 9.1% ஆகவும், ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 8.6% ஆகவும், அக்-டிசம்பர் மாதங்களில் 8.6% ஆகவும் இருக்கிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் ஆண்கள் மத்தியில், வேலையின்மை விகிதம் என்பது 2024 ஜனவரி - மார்ச் மாதத்தில் 6.1% ஆக இருந்துள்ளது. கடந்த 2023 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 5.9% ஆகவும், ஜூலை - செப்டம்பர் மாதத்தில் 6% ஆகவும், அக்-டிசமபர் மாதங்களில் 5.8% ஆகவும் இருந்துள்ளது. வாராந்திர நடப்பு நிலையில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது நகர்புறத்தில் 50.2% ஆக உயர்ந்துள்ளது. கடந்ந ஆண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது 48.5% ஆகவும் இருந்துள்ளது.