PBKS Vs RCB IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 08, முள்ளன்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித் தொடரில், இன்று இரவு 07:30 மணியளவில் பஞ்சாப் கிங்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (Punjab Kings Vs Chennai Super Kings) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, சென்னை அணி பௌலிங் செய்தது. தொடர் தோல்விக்கு பின் இப்போட்டியிலாவது சென்னை அணி வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்கத்தில் களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா (Priyansh Arya) பவுண்டரி, சிக்ஸர் மழையை பொலிந்து அசத்தினார். அவர் 7 பவுண்டரி, 9 சிக்ஸர் என 42 பந்துகளில் 103 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். Priyansh Arya: 42 பந்துகளில் சதம் விளாசி அசத்திய பிரியன்ஷ் ஆர்யா.. பஞ்சாப் மாஸ் சம்பவம்.! 

சென்னை அணிக்கு ரன்கள் இலக்கு:

பஞ்சாப் அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் பிரியன்ஷ் 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்திருந்தார். ஷ்ரேயஸ், பி. சிங், மார்கஸ், கிளன் மேக்ஸ்வெல், நெஹல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஷன்க்ஸக் 36 பந்துகளில் 52 ரன்னும், மார்கோ 19 பந்துகளில் 34 ரன்னும் அடித்தனர். ஆட்டத்தின் முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இதனால் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

தோனி - அஸ்வின் காம்போ:

பிரியன்ஷ் ஆர்யா சதம் கடந்து அசத்தல்:

டாஸ் அப்டேட்: