ஏப்ரல் 07, கலிபோர்னியா (Cinema News): உளவுத்துறை அதிகாரி தொடர்பான ஆக்சன்-அதிரடி நிறைந்த காட்சிகள் இடம்பெற்ற மிஷன் இம்பாஸிபிள் படத்துக்கு உலகளாவிய வரவேற்பு என்பது இருக்கிறது. இதனால் பிராந்திய மொழிகளிலும் படம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அர்னால்டு, ஜாக்கிசான் போல டாம் குரூசுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஜேம்ஸ் பாண்ட்டின் உளவாளி திரைப்படங்கள் போல, டாம் குரூஸின் திரைப்படங்கள் சண்டை காட்சிக்கும், வியப்பை ஏற்படுத்தும் ஆபத்தான ஸ்டண்ட் சண்டைக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது. Tirunelveli Ajith Fans: அம்மாடியோ.. சீட்டுக்கட்டுபோல நொறுங்கி சரிந்த அஜித் குமாரின் பிரம்மாண்ட கட்-அவுட்.. பதறவைக்கும் காட்சிகள்.!
மே மாதம் படம் வெளியாகும்:
இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் படத்தின் இறுதி அத்தியாயமான மிஷன்: இம்பாஸிபிள் - தி பைனல் ரெகோனிங் படம் நடப்பு ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று படக்குழு தரப்பில் ட்ரைலர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. தனது பாணியில் டாம் குரூஸ் ரசிகர்களின் அன்புக்காக உயிரை பணயம் வைத்து மேற்கொண்ட ஸ்டண்ட் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்டோபர் மெக்குரைன் இயக்கத்தில், டாம் குரூஸ், ஹெய்லேய் அத்வேல், சைமன் பெக் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள இப்படம் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகியுள்ளது. மே 23, 2025 அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.