Foster Father Arrested in Namakkal (Photo Credit: YouTube)

ஏப்ரல் 09, பள்ளிப்பாளையம் (Namakkal News): ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், தனது கணவரை பிரிந்து 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள முனியப்பன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரும், ஒடிசாவை சேர்ந்த சம்மர்தாஸ் (வயது 33), என்ற வாலிபரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும், நவீன விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வந்தனர். Chennai Shocker: போதைப்பொருள் வாங்கி வரமறுத்த நபர் அடித்துக்கொலை; சென்னையில் பயங்கரம்.!

1 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 07) மாலை, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு வயது பெண் குழந்தையை துாக்கிக்கொண்டு, சம்மர்தாஸ் வெளியில் சென்றுள்ளார். பின்னர், குழந்தையுடன் வீடு திரும்பினார். அப்போது, குழந்தையின் கை, கால் பகுதிகளில் ரத்த காயம் இருப்பதைக் கண்டு, தாய் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, குழந்தையை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தப்பியோட முயன்ற குற்றவாளி:

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு காவல்துறையினர் சம்மர்தாசை கைது செய்து, நேற்று (ஏப்ரல் 08) மாலை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது, தப்பி ஓட முயன்ற அவர், தவறி விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.