New Aadhaar App | Minister Ashwini Vaishnaw File Pic (Photo Credit: @DDTamilNews X)

ஏப்ரல் 09, சென்னை (Technology News): மத்திய அரசாங்கம், ஒரு புதிய ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை, ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டை நகல்கள் இல்லாமலேயே உடனடியாக சரிபார்த்து கொள்ள முடியும். இதனை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Minister Ashwini Vaishnaw) அவர்கள், சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் இதுகுறித்த தகவல்களை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். RBI Cuts Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அதிரடி..!

ஆதார் செயலி அறிமுகம்:

ஆதார் செயலி மூலம் முக அடையாளம் காட்டினாலே, ஒருவரின் ஆதார் தகவல்களை சரிபார்ப்பதற்காக, ஆதார் கார்டு வைத்திருப்பவரின் ஒப்புதலுடன் தரவு பாதுகாப்பான முறையில் பகிரப்படும் என்பதை அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த செயலி பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது. இது ஆதார் சரிபார்ப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இது பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதுடன் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் என கூறப்படுகிறது.

புதிய ஆதார் செயலியின் சிறப்பம்சங்கள் (New Aadhaar App Features):

  • புதிய ஆதார் செயலியின் மூலம், பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி தேவையான தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
  • QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், ஆதார் சரிபார்ப்பு இப்போது எளிதாக இருக்கும். ஆதாரின் நகல் அல்லது ஸ்கேன் இனி தேவையில்லை, அனைத்தும் செயலி மூலம் செய்யப்படும்.
  • மொபைல் செயலியில் முக அடையாளம் மூலம், லாகின் மற்றும் சரிபார்ப்பு வசதி உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு மேலும் அதிகரிக்கிறது.
  • இதன் மூலம், ஹோட்டல்கள், கடைகள் அல்லது பயண சோதனைச் சாவடிகளில் ஆதார் நகலை வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் செயலி போதும்.
  • செயலி மூலம், ஆதார் அட்டை தொடர்பான தரவு தவறாகப் பயன்படுத்துதல் அல்லது கசிவு ஏற்படும் அபாயமும் குறைக்கப்படும். ஆதார் தகவல்களை சேதப்படுத்துதல் அல்லது எந்த வகையான மோசடியும் சாத்தியமில்லை.
  • ஆதார் சரிபார்ப்பு மிகக் குறுகிய காலத்திலும், மிக எளிதான வழியிலும் செய்யப்படும். பழைய முறைகளுடன் ஒப்பிடும்போது, பயனாளர்களின் தனியுரிமை பாதுகாப்பாக இருக்கும்.

புதிய ஆதார் செயலி: