
ஏப்ரல் 08, புஏனோஸ் ஏரிஸ் (Sports News): சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அமைப்பு சார்பில் (International Shooting Sport Federation), ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய தலைசிறந்த வீரர்-வீராங்கனைகளை கண்டறியும்பொருட்டு துப்பாக்கிசூடுதல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான ஐஎஸ்எஸ்எப் போட்டி (ISSF World Cup 2025) அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஏரிஸ் நகரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. PBKS Vs CSK: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - சென்னை அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!
இந்திய சிங்கங்கள் அசத்தல்:
இதுவரை நடந்துள்ள ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில், இந்திய வீரர் ருத்ரன்கிஷ் பாட்டில் (Rudrankksh Patil) தங்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ரைபிள் பிரிவில் சயின் சிங் (Chain Singh) வெண்கலம் வென்றுள்ளார். 50 மீட்டர் ரைபிள் பெண்கள் பிரிவில் ஷிப்ட் கவுர் சம்ரா (Sift Kaur Samra) தங்கம் வென்றுள்ளார். 25 மீட்டர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஈஷா சிங் வெள்ளி (Esha Singh) வென்றுள்ளார். 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலத்துடன் இந்தியா பதக்கபட்டியலில் இரண்டாவது இடத்திலும், சீனா 3 தங்கம், தலா 2 வெள்ளி, வெண்கலத்துடன் முதல் இடத்திலும் இருக்கிறது. போட்டிகள் பல பிரிவுகளில் தொடர்ந்து நடக்கிறது.
இந்திய வரலாற்றில் 50 மீட்டர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையும் ஆகும்.