Reserve Bank of India (Photo Credit: @beatsinbrief X)

ஏப்ரல் 09, சென்னை (Technology News): இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழு (MPC) இன்று (ஏப்ரல் 09) புதிய நிதியாண்டிற்கான முதல் கொள்கை மறுஆய்வு கூட்டத்தின் முடிவுகளை வெளியிடவுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி துவங்கிய MPC கூட்டம், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா (RBI Governor Sanjay Malhotra) தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களில் நாட்டின் பணவீக்கம் தடுமாற்றத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு மூலம் பணவீக்கம் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. Yes Bank Layoffs: மூத்த நிர்வாக குழுவில் 4 பேர் பணிநீக்கம்.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

ரெப்போ விகிதம்:

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, 6% குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான், 'ரெப்போ விகிதம்' என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்ய முடியும். விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல், கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் (Repo Rate) உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும்.

ரெப்போ ரேட் குறைப்பு:

இந்நிலையில், ரெப்போ ரேட் விரைவில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம், 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.