ஏப்ரல் 09, தண்டையார்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வருபவர் முருகன் (55). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாக்லேட் கம்பெனி அருகில் உடலில் ரத்தக்காயத்துடன் சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, காசிமேடு மீன்பிடி துறைமுக அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் முருகன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதன்பேரில் நடந்த விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 5-Month-Old Baby Killed: குழந்தையின் மீது பாசத்தை திருப்பிய கணவர்.. தாயின் பதறவைக்கும் கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
அடித்துக்கொலை:
அதாவது, அப்பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் ரஞ்சித், ராகுல் புகையிலை விற்பனை செய்பவர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று முருகனிடம் ரூ.8000 பணம் கொடுத்து குட்கா, கான்ஸ் போன்ற போதைப்பொருளை ஆந்திராவில் இருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆந்திரா செல்ல முருகன் மறுத்தால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் இருவரின் மீதும் ஏற்கனவே குட்கா, கான்ஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்து இருக்கிறது.