ஏப்ரல் 08, நெல்லை நகரம் (Tirunelveli News): திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள குருநாதன் கோவில் விலக்கு பகுதியில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆறுமுகம் என்ற நபர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 20 வயதாகும் ஆறுமுகத்தை இருவர் கும்பல் கொன்று புதைத்துள்ளது. 5-Month-Old Baby Killed: குழந்தையின் மீது பாசத்தை திருப்பிய கணவர்.. தாயின் பதறவைக்கும் கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
காதல் விவகாரத்தில் கொலை?
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் சிவா, விஷால் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட 20 வயது இளைஞரின் உடல் 4 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இளைஞர் 2 பேரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையர் கீதா, அதிகாரிகள் வினோத் சாந்தாராம் தலைமையிலான அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.