MK Stalin | Chandrababu Naidu (Photo Credit: @MKStalin / @ncbn X)

டிசம்பர் 31, டெல்லி (Delhi News): ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி ஆகும். இதில் அதிகபட்சமாக ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) பணக்கார முதலமைச்சராக முதலிடத்தில் உள்ளார். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு (Pema Khandu) ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல்:

கர்நாடக முதல்வர் சித்தராமையா 51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து நாகாலாந்தின் நெய்பியு ரியோ (ரூ. 46.95 கோடி), மற்றும் மத்திய பிரதேசத்தின் மோகன் யாதவ் (ரூ 42.04 கோடி) 4வது மற்றும் 5வது இடத்தில உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் 14வது இடத்தில் உள்ளார். 15.38 லட்சம் சொத்து மதிப்புடன் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி, ஜம்மு & காஷ்மீரின் உமர் அப்துல்லா (ரூ. 55.24 லட்சம்), கேரள முதல்வர் பினராயி விஜயன் (ரூ. 1.18 கோடி), டெல்லியின் அதிஷி (ரூ. 1.41 கோடி) ஆகியோர் மிகக் குறைந்த சொத்துக்களைக் கொண்ட, இந்தியாவின் ஏழ்மை முதலமைச்சராக கடைசி 5 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். Viral Video: மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி அட்டூழியம்.. வீடியோ வைரல்..!

3 (10 சதவீதம்) முதல்வர்களின் சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகமாகவும், 9 பேர் (29 சதவீதம்) ரூ.11 கோடி முதல் ரூ.50 கோடி வரை சொத்து, 17 (55 சதவீதம்) பேர் ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை சொத்துக்கள் வைத்துள்ளனர். 2 முதல்வர்கள் (6 சதவீதம்) ரூ.1 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டுள்ளனர். 31 முதல்வர்களில் 2 பேர் மட்டுமே (மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அதிஷி) பெண்கள் ஆவர்.