ஜூலை 11, திரிபுரா (Tripura News): திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழப்பு என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது ஏப்ரல் 2007 முதல் மே 2024 வரை அங்கு 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு, பதிவு செய்து சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. Apple Warns iPhone Users In India: பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல்.. இந்திய ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை..!
இந்த அந்த மாநிலத்தில் இருக்கும் 164 சுகாதார மற்றும் மருத்துவ மையங்களில் பல மாணவர்கள் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. ஒரே ஊசி மூலம் பலர் போதை மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதால் இந்த நோய் அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதாக அதிர்ச்சிகர உண்மை வெளியாகியிருக்கிறது.