ஜனவரி 30, புதுடெல்லி (New Delhi): இந்திய பொருளாதாரம் ஜனவரி 24 என்ற தலைப்பில் இந்தியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் படி இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 1.14 லட்சம் ஸ்டார்ட் அப்புகள் (Startup) மூலம் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் அரசுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) நவம்பர் 2023 வரை 63 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் மதிப்பீட்டுச் சிக்கல்கள், சில ஐபிஓக்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் போக்குகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொண்டாலும், கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 950 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுடன், உலகளவில் மூன்றாவது பெரிய தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உள்ளது. அதுமட்டுமின்றி 31,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கான ஒட்டுமொத்த நிதியுதவி, 2019 முதல் 2023 வரையில் $70 பில்லியனைத் தாண்டியுள்ளது. HC On Palani Temple: இந்து அல்லாதவர்களுக்கு இனி பழனி கோயிலில் அனுமதி இல்லை... உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு...
இதுகுறித்து நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ் (Debjani Ghosh, President, Nasscom) கூறியதாவது, "2023 ஆம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் தங்கள் வணிக அடிப்படைகளை மேம்படுத்துவதற்கும், லாபம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளன. 2024 இல் டீப்டெக்கில் முதலீடுகள் மேல்நோக்கி செல்லும். ஜெனரேட்டிவ் AI (GenAI) முடுக்கம் மூலம், ஸ்டார்ட்-அப் நிறுவனர்களில் 70 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவை (AI) தங்கள் தீர்வுகளில் உட்பொதித்து வருகின்றனர். பொதுவாக இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்கு நிதி பற்றாக்குறையாக இருப்பதால், செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி, நாட்டில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் நிறுவனர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.