ஜனவரி 12, புதுடெல்லி (New Delhi): பங்குச்சந்தையில் இந்த வாரம் பாசிட்டிவ்வான வாரமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்த்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று திடீரென சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உச்சம் சென்ற பங்குச்சந்தை: மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து 72,600 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் என்எஸ்இ நிஃப்டி (NSE Nifty) 50 புள்ளிகள் உயர்ந்து 1.22 சதவீதம் அதிகரித்து, 21,911 புள்ளிகளாக உள்ளது. Kalki 2898 AD Release Date: இந்திய வரலாற்றில் முதல் முறை.. பிரம்மாண்டத்தின் நாயகன் பிரபாஸின் கல்கி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
இதனால் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 4.3 சதவீதமும், இன்ஃபோசிஸ் 7 சதவீதமும் உயர்ந்தன. இந்த உயர்வு தகவல் தொழில்நுட்ப (IT index) குறியீட்டை 5 சதவீதம் அதிகமாக உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் எச்சிஎல்டெக் ஆகியவை நிஃப்டி 50 குறியீட்டில் 3% முதல் 7% வரை உயர்ந்து லாபம் பெற்றுள்ளன.