Jobs (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 26, டெல்லி (Delhi News): இந்திய அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுத் தகுதி:

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. PM Modi's War on Obesity: உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்; 10 பிரபலங்களை பரிந்துரைத்த பிரதமர் மோடி..!

சம்பள விபரம்:

தபால் அலுவலர் (BPM) பணிக்கு ரூ.12,000 - 29,380, உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணிக்கு ரூ.10,000 - 24,470 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விபரம்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக 03.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் 06.03.2025 முதல் 10.03.2025 வரை மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவுக்கு ரூ.100, SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

*முதலில் indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று புதிய பயனர்களுக்கான பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

* உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடவும்: பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் பதிவுசெய்த பிறகு, உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

* தனிப்பட்ட, கல்வி மற்றும் தொடர்பு விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்

தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

* கிடைக்கக்கூடிய கட்டண முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்

உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்யவும்.

* பின்பு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.