Cow (Photo Credit: @naveengarewal X)

அக்டோபர் 17, புதுடெல்லி (New Delhi): கால்நடை பீமா யோஜனா (Pashu Dhan Bima Yojana) என்ற திட்டம் கால்நடைகள் வளர்ப்பால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதில் பால் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படும், பசுக்கள், எருமைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், மாடுகள், ஒட்டகம் என அனைத்து கால்நடைகளும் இந்த காப்பீட்டிற்குள் அடங்கும். காப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக, கால்நடை காப்பீட்டுத் திட்டம் பல்வேறு வகையான மானியங்களை வழங்குகிறது. மானியத்தின் அளவு பிரீமியத்தைப் பொருத்து அமையும். Poosanikai Puli Kuzhambu Recipe: மணமணக்கும் பூசணிக்காய் புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

கால்நடை பீமா யோஜனா: வறுமைகோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் மத்திய அரசின் சார்பில் 50%, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின கால்நடை வளர்ப்போருக்கு 70% வரை மானியம் வழங்கப்படுகிறது. கால்நடை காப்பீட்டு பாலிசியில் பராமரிப்பாளர்கள், 3 ஆண்டு மற்றும் 1 ஆண்டு என்ற பாலிசிகளில் விருப்பமானதைத் தேர்வு செய்து கொள்ளலாம். கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் ஏதேனும் இறந்தால், கால்நடைகளுக்கான காப்பீட்டுத் தொகையை 15 நாட்களுக்குள் நிபந்தனையின்றி வழங்கப்படும். இருப்பினும் பராமரிப்பாளர்கள், கால்நடை வளர்ப்பு காப்பீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.