ஏப்ரல் 03, புதுடெல்லி (New Delhi): இந்தியப் பொருளாதாரமானது (Indian Economy Growth) 2023-2024 நிதியாண்டில் 7.5% அதிகரிக்கும் என உலக வங்கி (World Bank) கணித்துள்ளது. அதேநேரம் தெற்காசியாவின் வளர்ச்சி 6.0% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆசியா அடுத்த இரண்டு வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி மற்றும் தொழில் துறையின் வளர்ச்சி மேம்படும்.
அதே நேரம் வங்காளதேச பொருளாதாரமானது உற்பத்தியில் 5.7 சதவிகிதமும் பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.3 சதவிகிதமும் இலங்கையின் பொருளாதாரமானது உற்பத்தியில் 2.5 சதவிகிதமும் வளர்ச்சியடையும். இந்த நாடுகளின் வளர்ச்சியால் தெற்காசியாவின் பொருளாதாரம் மேம்படும் என உலக வங்கி கணித்துள்ளது. Fire Breaks Out In Chennai: தீ விபத்தால் புகை மண்டலமான கிடங்கு.. சென்னையில் நடந்த தீ சம்பவம்..!
மேலும் இதுகுறித்து தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser, World Bank Vice President for South Asia) கூறியதாவது, "வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும். எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிலம், தொழிலாளர், முதலீடு,லாஜிஸ்டிக் உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும்” என்றார்.