ஏப்ரல் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காந்திவிலி பகுதியில் நோயாளி ஒருவரை பார்த்துக்கொள்ள, நேபாளம் நாட்டை சேர்ந்த ஹேம்குமாரி (வயது 30) என்ற பெண்மணி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை பார்க்கும் அதே பகுதியில் உள்ள கட்டிடத்தில் காவலாளியாக (Building Guard) பணியாற்றி வருபவர் தாம்பர் கட்கே (வயது 33). இவரும் நேபாளம் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காவலாளி தங்கிருக்கும் அறையில் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர். Jewelery Robbery: தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகள் கொள்ளை – முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்..!

இந்நிலையில், சம்பவ நாளன்று ஹேம்குமாரிக்கு பிறந்தநாள். இதனை அவருடைய காதலனுடன் சிறப்பிக்க வேண்டும் என்று ஹேம்குமாரி விரும்பியுள்ளார். இதனையடுத்து, அன்றிரவு இருவரும் காவலாளி அறையில் மது அருந்தியுள்ளனர். தனது குடும்ப பிரச்சனைகள் பற்றி ஹேம்குமாரி, தாம்பர் கட்கேவிடம் கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாம்பர் கட்கே, தனது காதலியின் தலை முடியை பிடித்து இழுத்து சுவற்றில் பலமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாம்பர் கட்கேவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் தனது காதலியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.